2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

புல்ஹாமிடம் தோற்ற யுனைட்டெட்

Mithuna   / 2024 பெப்ரவரி 26 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் சனிக்கிழமை (24)  நடைபெற்ற புல்ஹாமுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் தோற்றது.

புல்ஹாம் சார்பாக, கல்வின் பஸே, அலெக்ஸ் இவோபி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, யுனைட்டெட் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஹரி மக்குவாயா பெற்றார்.

இதேவேளை, பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியனின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் எவெர்ற்றன் சமப்படுத்தியது. பிறைட்டன் சார்பாகப் பெறப்பட்ட கோலை லூயிஸ் டங்க் பெற்றதோடு, எவெர்ற்றன் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜராட் பிறாத்வைட் பெற்றிருந்தார்.

பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 60 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் லிவர்பூல் உள்ளது. 59 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றியும், 58 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் ஆர்சனலும், 52 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் அஸ்டன் வில்லாவும் காணப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X