Shanmugan Murugavel / 2025 ஏப்ரல் 07 , மு.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், புல்ஹாமின் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (06) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-3 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் தோற்றது.
லிவர்பூல் சார்பாக அலெக்ஸிஸ் மக் அலிஸ்டர், லூயிஸ் டியஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். புல்ஹாம் சார்பாக றயான் செஸிக்னன், அலெக்ஸ் இவோபி, றொட்றிகோ முனிஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை தமது மைதானத்தில் நடைபெற்ற நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றியுடனான போட்டியை 0-0 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் சமப்படுத்தியது.
இந்நிலையில், பிரென்ஃபோர்ட்டின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 0-0 என்ற கோல் கணக்கில் செல்சி சமப்படுத்தியது.
பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 73 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் லிவர்பூல் காணப்படுகின்றது. 62 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் ஆர்சனலும் , 57 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் நொட்டிங்ஹாம் பொரெஸ்டும், 53 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் செல்சியும் காணப்படுகின்றது.
20 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
38 minute ago