Shanmugan Murugavel / 2025 மார்ச் 09 , பி.ப. 01:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெலிஸ்கா தொடரில், தமது மைதானத்தில் சனிக்கிழமை (08) நடைபெற்ற வி.எஃப்.எல் போச்சுமுடனான போட்டியில் 2-3 என்ற கோல் கணக்கில் பயேர்ண் மியூனிச் தோற்றது.
இதேவேளை தமது மைதானத்தில் நடைபெற்ற வேர்டர் ப்ரூமனுடனான போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான பயெர் லெவர்குசன் தோற்றது.
இந்நிலையில் தமது மைதானத்தில் நடைபெற்ற அகஸ்பேர்க்குடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் பொரூசியா டொட்டமுண்ட் தோற்றது.
புண்டெலிஸ்கா புள்ளிகள் பட்டியலில் 61 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் மியூனிச் காணப்படுகின்றது. 53 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் லெவர்குசனும், 44 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் மைன்ஸும், 42 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் ஐன்ரச்ட் பிராங்க்பேர்ட்டும் காணப்படுகின்றன. இதில் மற்றைய அணிகளை விட பிராங்க்பேர்ட் ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளது.
25 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
55 minute ago