Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 07 , பி.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளன 2026 உலகக் கிண்ணத் தொடருக்கான ஐரோப்பிய தகுதிகாண் போட்டிகளில் போர்த்துக்கல், இங்கிலாந்து ஆகியன வென்றுள்ளன.
ஆர்மினியாவில் சனிக்கிழமை (06) நடைபெற்ற அந்நாட்டுடனான போட்டியை 5-0 என்ற கோல் கணக்கில் போர்த்துக்கல் வென்றது.
போர்த்துக்கல் சார்பாக ஜோவா பீலிக்ஸ், கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் தலா இரண்டு கோல்களையும், ஜோவா கான்செலோ ஒரு கோலையும் பெற்றனர்.
இதேவேளை தம்நாட்டில் நடைபெற்ற அன்டோராவுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து வென்றது. இங்கிலாந்து சார்பாகப் பெறப்பட்ட ஒரு கோலை டெக்லான் றைஸ் பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது.
11 minute ago
43 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
43 minute ago
51 minute ago