Shanmugan Murugavel / 2025 ஒக்டோபர் 27 , பி.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

இவ்வாண்டுக்கான போர்மியுலா வண் சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் மக்லரன் அணியின் லான்டோ நொரிஸ் முன்னிலை பெற்றுள்ளார்.
திங்கட்கிழமை (27) நடைபெற்ற மெக்ஸிக்க குரான் பிறீயை வென்றமையைத் தொடர்ந்தே சக மக்லரன் அணியின் ஓட்டுநநான ஒஸ்கார் பியாஸ்திரியை நொரிஸ் முந்தியுள்ளார்.
பந்தயத்தை முதலாமிடத்திலிருந்து ஆரம்பித்த பிரித்தானியாவின் நொரிஸ் வென்ற நிலையில், பந்தயத்தை இரண்டாமிடத்திலிருந்து ஆரம்பித்த பெராரி அணியின் சார்ள்ஸ் லெக்கலெர்க் இரண்டாமிடத்தைப் பெற்றதோடு, பந்தயத்தை ஐந்தாமிடத்திலிருந்து ஆரம்பித்த நடப்புச் சம்பியனான மக்ஸ் வெர்ஸ்டப்பன் மூன்றாமிடத்தைப் பெற்றார்.
புள்ளிகள் பட்டியலில் 357 புள்ளிகளை நொரிஸ் பெற்றுள்ளதுடன், அவுஸ்திரேலியாவின் பியாஸ்திரி 356 புள்ளிகளைப் பெற்றுள்ளதுடன், 321 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் றெட் புல் அணியின் மக்ஸ் வெர்ஸ்டப்பன் காணப்படுகின்றார்.
16 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
53 minute ago