Shanmugan Murugavel / 2016 நவம்பர் 29 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்செஸ்டர் யுனைட்டெட், வெஸ்ட் ஹாம் அணிகளுக்கிடையே, மன்செஸ்டர் யுனைட்டெட்டின் மைதானமான ஓல்ட் ட்ரபோர்ட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (27) இடம்பெற்ற போட்டியில், விரக்தியினால் போத்தலொன்றை உதைத்த மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முகாமையாளர் ஜொஸே மொரின்யோ மீது கால்பந்தாட்டச் சங்கம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்த மேற்படி போட்டியில், அரங்கத்துக்கு மத்தியஸ்தர் ஜோன் மொஸ்ஸினால் அனுப்பப்பட்ட 53 வயதான ஜொஸ் மொரின்யோ முறையற்ற நடத்தையை மேற்கொண்டதாக, நேற்றுத் திங்கட்கிழமை (28) குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மொரின்யோ பதிலளிக்க, இலங்கை நேரப்படி நாளை மறுதினம் வியாழக்கிழமை இரவு 11.30மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
வெஸ்ட் ஹாம் அணித்தலைவர் மார்க் நொப்லே தொடுகையில் இல்லாதபோது, மன்செஸ்டர் யுனைட்டெட்டின் போல் பொக்பா பாய்ந்தாமை காரணமாக மஞ்சள் அட்டை காட்டப்படவே, போத்தலை மொரின்யோ உதைத்திருந்தார்.
கடந்த மாதம் 29ஆம் திகதி இடம்பெற்ற பேர்ண்லி அணிக்கெதிரான போட்டியில், இடைவேளையொன்றில் இடம்பெற்ற சம்பவமொன்றுக்காக, அரங்குக்கு மொரின்யோ அனுப்பப்பட்டிருந்ததுடன், குறித்த சம்பவத்துக்காக ஒரு போட்டித் தடையும் 8,000 ஸ்டேர்லிங் பவுண்ஸ்கள் அபாரதமும் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மொரின்யோ ஏற்கெனவே இப்பருவகாலத்தில் அரங்குக்கு வெளியேற்றப்பட்டுள்ளதால், மொரின்யோ குற்றச்சாட்டை ஏற்றாலும் அல்லது மறுத்தாலும், அவருக்கான தண்டனை, ஆணைக்குழுவொன்றாலேயே தீர்மானிக்கப்படும்.
இதேவேளை, இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி லிவர்பூலின் மைதானமான அன்பீல்டில இடம்பெற்ற லிவர்பூலுக்கெதிரான போட்டியில், மத்தியஸ்தர் அந்தோனி டெய்லர் மீதான கருத்துக்களுக்காக, 50,000 ஸ்டேர்லிங் பவுண்ஸ்கள் அபாரதம் விதிக்கப்பட்டிருந்தது.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago