Shanmugan Murugavel / 2016 ஜூலை 25 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரச ஆதரவுடனான ஊக்கமருந்துப் பாவனை காரணமாக, றியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு ரஷ்யாவுக்கு முழுமையான தடை விதிக்கப்படுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவ்வாறான தடையை விதிப்பதற்கு எதிராக, சர்வதேச ஒலிம்பிக் செயற்குழு தீர்மானித்துள்ளது.
அரச ஆதரவுடனான ஊக்கமருந்துப் பாவனை காரணமாக, ரஷ்யாவின் தடகள வீர, வீராங்கனைகள், றியோ ஒலிம்பிக்கில் பங்குபெற முடியாது என்ற நிலையில், சோச்சியில் இடம்பெற்ற குளிர்கால ஒலிம்பிக்கிலும், அரச ஆதரவுடனான ஊக்கமருந்துப் பாவனை இடம்பெற்றது என்ற அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து, ரஷ்யாவைச் சேர்ந்த அனைத்து வீர, வீராங்கனைகளுக்கும் தடை விதிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில் அது தொடர்பாக ஆராய்ந்த சர்வதேச ஒலிம்பிக் செயற்குழு, தவறு செய்யாத ரஷ்ய வீரர்களைப் பாதுகாப்பதற்காக, முழுமையான தடை விதிக்கப்படாது என அறிவித்துள்ளது.
மாறாக, றியோ ஒலிம்பிக்கில் பங்குபற்றுவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள ரஷ்யாவைச் சேர்ந்த 387 வீர, வீராங்கனைகளும், கடுமையான சோதனைகளின் பின்னரே அனுமதிக்கப்படுவர். குறிப்பாக, ஒவ்வொரு வீரரையும் ரஷ்யாவின் விளையாட்டுச் சம்மேளனம், குற்றமற்றவர் என அறிவிக்க வேண்டும்; கடந்த காலங்களில் சோதனைகளில் சிக்காமலிருந்தாலும் கூட, தவறு செய்யாமைக்கான ஆதாரமாக அது கருதப்படாது; ஒவ்வொரு தனிப்பட்ட முடிவையும், விளையாட்டுக்கான தீர்ப்பாய நீதிமன்றத்தைச் சேர்ந்த ஒருவர் அனுமதிக்க வேண்டும்; இதற்கு முன்னர் ஊக்கமருந்துச் சோதனையில் சிக்கியவர், அவரது தண்டனைக் காலத்தைப் பூர்த்தி செய்தாலும் கூட அனுமதிக்கப்படார்; சோச்சி ஒலிம்பிக் தொடர்பான பேராசிரியர் மக்லரனின் அறிக்கையில் பெயரிடப்பட்ட எவரும் பங்குபெற முடியாது போன்ற, இந்த நடைமுறைகளில் சிலவாகும்.
முழுமையான தடைக்குக் கோரிய ஊக்கமருந்துக்கெதிரான உலக முகவராண்மை உள்ளிட்ட பல அமைப்புகள், சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் இந்த முடிவால், ஏமாற்றமடைந்துள்ளனவெனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026