Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2021 செப்டெம்பர் 12 , பி.ப. 08:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகின் தலைசிறந்த கால்பந்து வீரரான போர்த்துக்கல் நாட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, மன்செஸ்டர் யுனைட்டெட் கழகத்துக்காக தான் விளையாடிய முதல் போட்டியிலேயே இரண்டு கோல்களை அடித்து அசத்தியுள்ளார்.
கடந்த 2003ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை மன்செஸ்டர் யுனைட்டெட் அணிக்காக ரொனால்டோ விளையாடினார். பின்னர், ரியல் மற்றிட் அணிக்கு மாறி அந்த அணிக்காக சுமார் 9 ஆண்டுகள் விளையாடிய அவர், யுவென்டர்ஸ் அணிக்கு சென்றார்.
தற்போது மீண்டும் மன்செஸ்டர் யுனைட்டெட் அணிக்கு திரும்பியுள்ள ரொனால்டோ, நேற்று நியூ கேஸ்டில் அணிக்கெதிராக முதன்முறையாக களம் இறங்கினார்.
முதல் போட்டியிலேயே இரண்டு கோல்கள் அடித்து ரொனால்டோ அசத்திய நிலையில், மன்செஸ்டர் யுனைட்டெட் 4-1 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்றது.
இதில் ரொனால்டோ (45+2), 62 நிமிடங்களில் கோல்கள் அடித்தார். இதன்மூலம் தனது திறமை இன்னும் குறையவில்லை என்பதை நிரூபித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 May 2025
20 May 2025
20 May 2025