Shanmugan Murugavel / 2016 செப்டெம்பர் 08 , பி.ப. 03:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
இடம்பெற்றுவரும் ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டிகளில் ஆண்கள்ஒற்றையர் போட்டிகளில், உலகின் இரண்டாம் நிலை வீரரும் றியோ ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்றவருமான அன்டி மரே, காலிறுதிப் போட்டியில் வைத்துத் தோல்வியடைந்தார்.
உலகின் 7ஆம் நிலை வீரரான ஜப்பானின் கீ நிஷிகோரியை எதிர்கொண்ட அன்டி மரே, முதலாவது செட்டை 6-1 என் இலகுவாகக் கைப்பற்றினார். ஆனால் அடுத்த செட்டை நிஷிகோரி, 6-4 எனக் கைப்பற்றிப் பதிலடி வழங்கினார்.
மூன்றாவது செட்டில் மீண்டும் சிறப்பாகச் செயற்பட்ட மரே, 6-4 என்ற செட் கணக்கில் வென்றார். அடுத்த செட்டில், நிஷிகோரி, மிகவும் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி, 6-1 என்ற கணக்கில் வென்று, தீர்க்கமான 5ஆவது செட்டை, 7-5 எனப் போராடி வென்றார். இதனடிப்படையில், 1-6, 6-4, 4-7, 6-1, 7-5 என்ற செட் கணக்கில், நிஷிகோரி வெற்றிபெற்றார்.
மற்றைய போட்டியொன்றில், ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்ட்டின் டெல் பொட்ரோவை எதிர்கொண்ட 4ஆம் நிலை வீரரான சுவிற்ஸர்லாந்தின் ஸ்டான் வவ்றிங்கா, 7-6, 4-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார்.
பெண்களுக்கான போட்டிகளில், 6ஆம் நிலை வீராங்கனையான றோமானியாவின் சிமோனா ஹலெப்பை எதிர்கொண்ட உலகின் முதல்நிலை வீராங்கனையான ஐக்கிய அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், 6-2, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் போராடி வெற்றிபெற்றார்.
11ஆம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, குரோஷியாவின் அனா கொஞ்ஜுவை எதிர்கொண்டு, 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று, அரையிறுதிக்குத் தகுதிபெற்றார்.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago