Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 18 , பி.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கிந்தியத் தீவுகள், இந்திய அணிகளுக்கிடையிலான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் நான்காவது டெஸ்ட் போட் போர்ட் ஒஃப் ஸ்பெயினில் நேற்று ஆரம்பித்த நிலையில், போட்டியின் முதலாவது நாள் ஆட்டம் பெரும்பாலாக மழையினால் பாதிக்கப்பட்டிருந்தது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைவர் ஜேஸன் ஹோல்டர், தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்திருந்த நிலையில், 22 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட முதலாவது நாளில், மேற்கிந்தியத் தீவுகள் அணி, இரண்டு விக்கெட்டுகளை இழந்து 62 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
தற்போது, கிரேய்க் பிராத்வெயிட் 32 ஓட்டங்களுடனும் மார்லன் சாமுவேல்ஸ் நான்கு ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.
பந்துவீச்சில் இஷாந் ஷர்மா, இரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினைக் கைப்பற்றியிருந்தனர்.
இப்போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் அணியில், கடந்த போட்டியில் விளையாடிய வேகப்பந்துவீச்சாளர் அல்ஸாரி ஜோஸப்புக்கு பதிலாக சுழற்பந்துவீச்சாளர் தேவேந்திர பிஷூ இடம்பெற்றதோடு, இந்திய அணியில், ஷீகர் தவானுக்கு பதிலாக முரளி விஜய் அணியில் இடம்பெற்றதோடு, இரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக சட்டேஸ்வர் புஜாரா அணியில் இடம்பிடித்தார்.
5 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
12 Apr 2026
12 Apr 2026