Editorial / 2022 ஜூன் 01 , பி.ப. 06:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

சீனாவை சேர்ந்த கின்வென் செங் (Qinwen Zheng) பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் நான்காவது சுற்றோடு வெளியேறியுள்ளார்
"நான் ஆணாக இருந்திருக்கலாம்" என ஆட்டத்திற்குப் பிறகு அவர் மிகவும் வேதனையுடன் சொல்லியிருந்தார். மாதவிடாய் காலத்தில் ஏற்பட்ட வலி காரணமாகவே அவர், வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
ஒற்றையர் பிரிவுக்கான நான்காவது சுற்றில் டென்னிஸ், உலகின் நம்பர் 1 வீராங்கனையான போலந்து நாட்டின் இகா ஸ்வியாடெக் (Iga Swiatek)-க்கு எதிராக கின்வென் செங் விளையாடினார். முதல் செட் முடிந்த நிலையில் இரண்டாவது செட்டின்போது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர், மருத்துவ ரீதியான டைம்-அவுட் எடுத்துக் கொண்டார்.
இருந்தாலும் அவரால் ஆட்டத்தில் வெற்றி பெற முடியவில்லை. தோல்விக்கு பிறகு அவர் உருக்கமாக சில விஷயங்களைப் பகிர்ந்தார்.
"எனக்கு காலில் வலி இருந்தது. இருந்தாலும் எனக்கு ஏற்பட்ட வயிற்று வலியுடன் ஒப்பிடும்போது அது பெரிய வலி இல்லை. அந்த வலியுடன் என்னால் விளையாட முடியவில்லை. இது பெண்களின் விஷயம். மாதவிடாய் காலங்களில் முதல் நாள் மிகவும் கடினமானது. அதுவும் இயல்பாகவே முதல் நாளன்று எனக்கு வலி சற்று அதிகம் இருக்கும்.
டென்னிஸ் கோர்ட்டில் நான் விளையாடியபோது நான் ஆணாக இருந்திருக்கலாம் என அந்த தருணம் எண்ணினேன் என்றார்.
6 hours ago
6 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago
9 hours ago