Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2019 மார்ச் 10 , பி.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜேர்மனிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான புண்டெலிஸ்கா தொடரின் புள்ளிகள் பட்டியலில், கடந்தாண்டு செப்டெம்பருக்குப் பின்னர் முதற்தடவையாக முதலாமிடத்துக்கு, நடப்புச் சம்பியன்களான பயேர்ண் மியூனிச் முன்னேறியுள்ளது.
தமது மைதானத்தில், நேற்றிரவு இடம்பெற்ற வி.ஃஎவ்.எல் வொல்ஃவ்ஸ்பேர்க்குடனான போட்டியில் வென்றதன் மூலமே, புண்டெலிஸ்கா புள்ளிகள் பட்டியலில் முதலாமிடத்துக்கு பயேர்ண் மியூனிச் முன்னேறியுள்ளது.
இப்போட்டியின் 34ஆவது நிமிடத்தில், தமது முன்கள வீரரான சேர்ஜி நர்பி, கோல் கம்பத்துக்கருகேயிருந்து பெற்ற கோலின் மூலம் முன்னிலை பெற்ற பயேர்ண் மியூனிச், அடுத்த மூன்றாவது நிமிடத்தில் இன்னொரு முன்கள வீரரான றொபேர்ட் லெவன்டோஸ்கி கோல் கம்பத்துக்கருகேயிருந்து பெற்ற கோல் காரணமாக தமது முன்னிலையை இரட்டிப்பாக்கிக் கொண்டது.
முதற்பாதியை 2-0 என்ற கோல் கணக்கில் முடித்திருந்த பயேர்ண் மியூனிச், தமது இன்னொரு முன்கள வீரரான ஜேம்ஸ் றொட்றிகாஸ், பெனால்டி பகுதியின் எல்லையிலிருந்து 52ஆவது நிமிடத்தில் பெற்ற கோலின் மூலம் 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
தொடர்ந்த போட்டியின் 76ஆவது நிமிடத்தில், தமதணித்தலைவர் தோமஸ் முல்லர் பெற்ற கோலின் மூலம் 4-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையைப் பெற்ற பயேர்ண் மியூனிச், அடுத்த ஆறாவது நிமிடத்தில் தமது பின்கள வீரர் ஜோஷுவா கிம்மிச் பெற்ற கோலோடும் அதற்கடுத்த மூன்றாவது நிமிடத்தில் றொபேர்ட் லெவன்டோஸ்கி பெற்ற தனது இரண்டாவது கோலோடும் 6-0 என்ற கோல் கணக்கில் இறுதியில் பயேர்ண் மியூனிச் வென்றது.
இதேவேளை, தமது மைதானத்தில் நேற்று இடம்பெற்ற வி.எஃவ்.பி ஸ்டர்காட்டுடனான போட்டியை 3-1 என்ற கோல் கணக்கில் பொரூசியா டொட்டமுண்ட் வென்றிருந்தது. பொரூசியா டொட்டமுண்ட் சார்பாக, மார்கோ றொய்ஸ், பக்கோ அல்கேஸர், கிறிஸ்டியன் புலிசிச் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, வி.எஃவ்.பி ஸ்டட்கார்ட் சார்பாகப் பெறப்பட்ட கோலை மார்க் ஒலிவர் கெம்ப்ஃ பெற்றிருந்தார்.
அந்தவகையில், கடந்தாண்டு டிசெம்பரில், புண்டெலிஸ்கா புள்ளிகள் பட்டியலில் இரண்டாமிடத்திலிருந்த அணியை விட ஒன்பது புள்ளிகள் அதிகமாகப் பெற்றிருந்த பொரூசியா டொட்டமுண்ட், பயேர்ண் மியூனிச்சின் அதே 57 புள்ளிகளையே பெற்றுள்ளபோதும், கோலெண்ணிக்கை வித்தியாசத்தில், இரண்டு கோல்களால் முதலாமிடத்தை பயேர்ண் மியூனிச்சிடம் இழந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago