Shanmugan Murugavel / 2024 நவம்பர் 20 , பி.ப. 06:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு இந்தியாவின் ஹர்திக் பாண்டியா முன்னேறியுள்ளார்.
தென்னாபிரிக்காவுக்கெதிரான இறுதி இரண்டு போட்டிகளிலும் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, 18 ஓட்டங்களைப் பெற்ற நிலையிலேயே மூன்றாமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி முதலாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
இதேவேளை மேற்குறிப்பிட்ட போட்டிகளில் 227 ஓட்டங்களைப் பெற்ற இந்தியாவின் திலக் வர்மா, துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில் 72ஆம் இடத்திலிருந்து 69 இடங்கள் முன்னேறி மூன்றாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
இந்நிலையில் அவுஸ்திரேலியாவுக்கெதிரான மூன்று போட்டிகளில் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அவுஸ்திரேலியாவின் அடம் ஸாம்பா, பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் எட்டாமிடத்திலிருந்து ஐந்து இடங்கள் முன்னேறி மூன்றாமிடத்தையடைந்துள்ளார்.
இதேவேளை தென்னாபிரிக்காவுக்கெதிரான மேற்குறித்த போட்டிகளில் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இந்தியாவின் அர்ஷ்டீப் சிங், 12ஆம் இடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி ஒன்பதாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
இதுதவிர ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் நியூசிலாந்துக்கெதிரான முதலிரண்டு போட்டிகளில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இலங்கையின் மகேஷ் தீக்ஷன, 12ஆம் இடத்திலிருந்து ஆறு இடங்கள் முன்னேறி ஆறாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவைரிசை பின்வருமாறு,
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
5 hours ago
9 hours ago
31 Mar 2026
31 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
31 Mar 2026
31 Mar 2026