Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 17 , பி.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டிகளுக்கான தரவரிசையில் முதலாமிடத்துக்கு இந்தியாவின் வருண் சக்கரவர்த்தி முன்னேறியுள்ளார்.
ஆசியக் கிண்ணத் தொடரில் ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தானுக்கெதிரான போட்டியில் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றிய நிலையிலேயே நான்காமிடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறிய வருண் முதலாமிடத்தையடைந்துள்ளார்.
இதேவேளை ஆசியக் கிண்ணத் தொடரின் பங்களாதேஷுக்கெதிரான போட்டியில் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றிய இலங்கையின் வேகப்பந்துவிச்சாளர் நுவான் துஷார, 12ஆம் இடத்திலிருந்து ஆறு இடங்கள் முன்னேறி ஆறாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
1. வருண் சக்கரவர்த்தி, 2. ஜேக்கப் டஃபி, 3. அகீல் ஹொஸைன், 4. அடம் ஸாம்பா, 5. அடில் ரஷீட், 6. நுவான் துஷார, 7. வனிது ஹசரங்க, 8. ரவி பிஷ்னோய், 9. நாதன் எலிஸ், 10. ரஷீட் கான்.
இந்நிலையில் தென்னாபிரிக்காவுக்கெதிரான இரண்டாவது போட்டியில் 141 ஓட்டங்களைப் பெற்ற இங்கிலாந்தின் பில் ஸோல்ட், துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் மூன்றாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி இரண்டாமிடத்தையடைந்துள்ளார்.
இதேவேளை மேற்படி போட்டியிலும், முதற் போட்டியிலும் 108 ஓட்டங்களைப் பெற்ற இங்கிலாந்தின் ஜொஸ் படலர், நான்காமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி மூன்றாமிடத்தையடைந்துள்ளார்.
இதுதவிர ஆசியக் கிண்ணத் தொடரின் பங்களாதேஷ், ஹொங் கொங்குக்கிடையிலான போட்டிகளில் 118 ஓட்டங்களைப் பெற்ற இலங்கையின் பதும் நிஸங்க ஏழாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஆறாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
1. அபிஷேக் ஷர்மா, 2. பில் ஸோல்ட், 3. ஜொஸ் பட்லர், 4. திலக் வர்மா, 5. ட்ரெவிஸ் ஹெட், 6. பதும் நிஸங்க, 7. சூரியகுமார் யாதவ், 8. டிம் செய்ஃபேர்ட், 9. குசல் பெரேரா, 10. டிம் டேவிட்.
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
1. ஹர்திக் பாண்டியா, 2. மொஹமட் நபி, 3. சிகண்டர் ராசா, 4. டிபேந்திர சிங் ஐரீ, 5. றொஸ்டன் சேஸ்
8 minute ago
24 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
24 minute ago
34 minute ago