2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

முதலாமிடத்துக்கு முன்னேறிய ஷகிப்

Shanmugan Murugavel   / 2021 ஓகஸ்ட் 11 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான சகலதுறைவீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதலாமிடத்துக்கு ஷகிப் அல் ஹஸன் முன்னேறியுள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் ஏழு விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, 114 ஓட்டங்களைப் பெற்ற நிலையிலேயே, இரண்டாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி முதலாமிடத்தை ஷகிப் அடைந்துள்ளார்.

முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. ஷகிப் அல் ஹஸன், 2. மொஹமட் நபி, 3. றிச்சர்ட் பெரிங்டன், 4. கஹவர் அலி, 5. கொலின்ஸ் ஒபுயா.

இந்நிலையில், குறித்த தொடரில் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அவுஸ்திரேலியாவின் அஸ்தன் அகர், எட்டாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஏழாமிடத்தை அடைந்துள்ளார்.

இத்தொடரில், ஏழு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பங்களாதேஷின் முஸ்தபிசூர் ரஹ்மான், பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 30ஆம் இடத்திலிருந்து 20 இடங்கள் முன்னேறி 10ஆம் இடத்தை அடைந்துள்ளார்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. தப்ரையாஸ் ஷம்சி, 2. வனிடு ஹஸரங்க, 3. ரஷீட் கான், 4. அடில் ரஷீட், 5. முஜீப் உர் ரஹ்மான், 6. டிம் செளதி, 7. அஸ்தன் அகர், 8. அடம் ஸாம்பா, 9. இஷ் சோதி, 10. முஸ்தபிசூர் ரஹ்மான்.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. டேவிட் மலான், 2. பாபர் அஸாம், 3. டெவோன் கொன்வே, 4. ஆரோன் பின்ஞ், 5. விராட் கோலி, 6. லோகேஷ் ராகுல், 7. மொஹமட் றிஸ்வான், 8. மார்டின் கப்தில், 9. எவின் லூயிஸ், 10. றஸி வான் டர் டுஸன்.

இதேவேளை, டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில், இந்தியாவுக்கெதிரான முதலாவது டெஸ்டில் 173 ஓட்டங்களைப் பெற்ற இங்கிலாந்தின் ஜோ றூட், ஐந்தாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி நான்காமிடத்தை அடைந்துள்ளார்.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. கேன் வில்லியம்ஸன், 2. ஸ்டீவ் ஸ்மித், 3. மர்னுஸ் லபுஷைன், 4. ஜோ றூட், 5. விராட் கோலி, 6. ரோஹித் ஷர்மா, 7. றிஷப் பண்ட், 8. டேவிட் வோணர், 9. குயின்டன் டி கொக், 10. ஹென்றி நிக்கொல்ஸ், பாபர் அஸாம்.

இந்நிலையில், இந்த டெஸ்டில் நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இங்கிலாந்தின் ஜேம்ஸ் அன்டர்சன், எட்டாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஏழாமிடத்தை அடைந்துள்ளார்.

தவிர, குறித்த டெஸ்டில் ஒன்பது விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இந்தியாவின் ஜஸ்பிரிட் பும்ரா, 19ஆம் இடத்திலிருந்து 10 இடங்கள் முன்னேறி ஒன்பதாமிடத்தை அடைந்துள்ளார்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. பற் கமின்ஸ், 2. இரவிச்சந்திரன் அஷ்வின், 3. டிம் செளதி, 4. ஜொஷ் ஹேசில்வூட், 5. நீல் வக்னர், 6. ககிஸோ றபாடா, 7. ஜேம்ஸ் அன்டர்சன், 8. ஸ்டூவர்ட் ப்ரோட், 9. ஜஸ்பிரிட் பும்ரா, 10. மிற்செல் ஸ்டார்க்.

இந்த டெஸ்டில் 56 ஓட்டங்களைப் பெற்ற இந்தியாவின் இரவீந்திர ஜடேஜா, சகலதுறைவீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில், மூன்றாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி இரண்டாமிடத்தை அடைந்துள்ளார்.

முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. ஜேஸன் ஹோல்டர், 2. இரவீந்திர ஜடேஜா, 3. பென் ஸ்டோக்ஸ், 4. இரவிச்சந்திரன் அஷ்வின் 5. ஷகிப் அல் ஹஸன்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .