2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

முன்னிலைக்கு இரண்டு அணிகளும் போராட்டம்

Shanmugan Murugavel   / 2022 ஜூன் 29 , பி.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், காலியில் இன்று ஆரம்பித்த முதலாவது டெஸ்டின் இன்றைய முதலாம் நாள் முடிவில் முன்னிலைக்கு இரண்டு அணிகளும் போராடுகின்றன.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 212 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. நிரோஷன் டிக்வெல்ல 58, அஞ்சலோ மத்தியூஸ் 39, அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 28, பதும் நிஸங்க 23 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், நேதன் லையன் 5, மிற்செல் ஸ்வப்ஸன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்திரேலியா இன்றைய முதலாம் நாள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 98 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. தற்போது களத்தில், உஸ்மான் கவாஜா 47 ஓட்டங்களுடனும், ட்ரெவிஸ் ஹெட் ஆறு ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமலுள்ளனர். முன்னதாக டேவிட் வோர்னர் 25 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்திருந்தார். பந்துவீச்சில், ரமேஷ் மென்டிஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .