Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mithuna / 2024 ஜனவரி 18 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான முதலாவது டெஸ்டில் முன்னிலையில் அவுஸ்திரேலியா காணப்படுகின்றது.
இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரில், அடிலெய்ட்டில் நேற்று ஆரம்பமான இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணியின் தலைவர் பற் கமின்ஸ் தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.
மேற்கிந்தியத் தீவுகள் சார்பாக வேகப்பந்துவீச்சாளர் ஷமர் ஜோசப் அறிமுகத்தை மேற்கொண்டதோடு, ஜஸ்டின் கிறேவ்ஸ் மற்றும் கவெம் ஹொட்ஜ் ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொண்டனர்.
முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் கமின்ஸ் (4), ஜொஷ் ஹேசில்வூட் (4), மிற்செல் ஸ்டார்க், நேதன் லையனிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 188 ஓட்டங்களையே பெற்றது. துடுப்பாட்டத்தில் கேர்க் மக்கென்ஸி 50, ஷமர் ஜோசப் 36 ஓட்டங்களைப் பெற்றனர்.
பதிலுக்கு தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா நேற்றைய முதல் நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 59 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. களத்தில் உஸ்மான் கவாஜா ஆட்டமிழக்காமல் 30, கமரொன் கிறீன் ஆறு ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமலுள்ளனர். வீழ்த்தப்பட்ட 2 விக்கெட்டுகளையும் ஷமர் ஜோசப் கைப்பற்றினார்.
2 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
8 hours ago