Shanmugan Murugavel / 2024 டிசெம்பர் 15 , பி.ப. 09:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கெதிரான மூன்றாவது டெஸ்டின் இரண்டாவது நாள் முடிவில் முன்னிலையில் அவுஸ்திரேலியா காணப்படுகின்றது.
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலியாவும் வென்ற நிலையில், பிறிஸ்பேணில் சனிக்கிழமை (14) ஆரம்பமான இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அவுஸ்திரேலியா, ட்ரெவிஸ் ஹெட்டின் 151, ஸ்டீவன் ஸ்மித்தின் 101 ஓட்டங்களோடு இன்றைய இரண்டாம் நாள் முடிவில் தமது முதலாவது இனிங்ஸில் 7 விக்கெட்டுகளை இழந்து 405 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
தற்போது களத்தில் அலெக்ஸ் காரி 45 ஓட்டங்களுடனும், மிற்செல் ஸ்டார்க் ஏழு ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமலுள்ளனர். பந்துவீச்சில் ஜஸ்பிரிட் பும்ரா 5 மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி, மொஹமட் சிராஜ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
5 hours ago
9 hours ago
31 Mar 2026
31 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
31 Mar 2026
31 Mar 2026