Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2022 ஜனவரி 07 , பி.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுத் தொடரின் போது ஒழுக்க மீறலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களான தனுஷ்க குணதிலக, நிரோஷன் திக்வெல்ல மற்றும் குசல் மென்டிஸ் ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த போட்டித் தடை நீக்கப்பட்டுள்ளது.
மேற்படி மூன்று வீரர்களுக்கும் தலா 10 மில்லியன் ரூபாய் அபாராதமும், சர்வதேச போட்டிகளில் விளையாட ஒரு வருடகால தடையும், உள்நாட்டு போட்டிகளில் விளையாட 6 மாத காலம் தடையும் விதிக்கப்பட்டிருந்தது.
கடந்த வருடம் ஜூன் மாதம் நடைபெற்ற, இங்கிலாந்து சுற்றுத் தொடரின் போது, ஜூன் 27 ஆம் திகதி இரவு, உயிர்க் குமிழி முறையை மீறி இங்கிலாந்து டரம் பிரதேசத்தில் மூவரும் சுற்றித்திரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இது தொடர்பில் வீடியோ ஆதாரமும் வௌியிடப்பட்டிருந்தது.
குற்றம் சுமத்தப்பட்ட குறித்த வீரர்கள் தொடர்பில் விசாரணை ஒன்றை நடாத்துவதற்காக, ஐவர் கொண்ட குழுவொன்று கடந்த ஜூலை மாதம் 07 ஆம் திகதி நியமிக்கப்பட்டிருந்தது. அந்தக் குழுவின் பரிந்துரைகளுக்கு அமையவே போட்டித்தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இலங்கையில் நடைபெறவுள்ள சிம்பாம்வே அணிக்கு எதிரான தொடரில் மேற்படி மூன்று வீரர்களும் விளையாடுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
2 hours ago