2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

மே.தீவுகள் குழாம் அறிவிப்பு

Editorial   / 2017 ஜூன் 06 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. 13 பேர் கொண்ட குழாமாகவே, இக்குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்ட குழாமில், சகலதுறை வீரர் றொஸ்டன் சேஸும் இடம்பெற்றுள்ளார். றொஸ்டன் சேஸ், ஒருநாள் சர்வதேச போட்டிக் குழாமில் இடம்பெறுவது, இம்முறையே முதற்தடவையாகும்.

கடந்தாண்டு, டெஸ்ட் போட்டிகளில், அறிமுகத்தை மேற்கொண்ட சேஸ், 10 டெஸ்ட்களில் மூன்று சதங்களைப் பெற்று, நம்பத் தகுந்த மத்திய வரிசை வீரராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டதுடன், கைகொடுக்கக் கூடிய சுழற் பந்துவீச்சாளராக உள்ளபோதும், மேற்கிந்தியத் தீவுகளின் உள்ளூர் 50 ஓவர் போட்டிகளில், பெரிதாக ஓட்டங்களைப் பெறவில்லை.

மேற்கிந்தியத் தீவுகள் இறுதியாக விளையாடிய ஒருநாள் சர்வதேசப் போட்டியான, பாகிஸ்தானுடனான போட்டியின் குழாமில் இடம்பெற்றிருந்த 14 வீரர்களில், 12 வீரர்கள், தற்போதைய குழாமிலும் இடம்பெற்றுள்ளனர். பாகிஸ்தானுடனான தொடரின் மூன்று போட்டிகளிலும் 36 ஓட்டங்களை மாத்திரமே பெற்ற விக்கெட் காப்பாளர் சட்விக் வோல்டன், இடதுகை சுழற்பந்து வீச்சாளர் வீர்சாமி பெருமாள் ஆகியோரே, தற்போதைய குழாமில் இடம்பெறவில்லை.

இந்நிலையில், ஒருநாள் சர்வதேசப் போட்டி அணிக்கு வீரர்களைத் தெரிவுசெய்யும் கொள்கையை மாற்றவுள்ளதாக, தேர்வுக் குழுவின் தலைவர் கோர்ட்னி பிறவுணி தெரிவித்தபோதும், சுனில் நரைன், கெரான் பொலார்ட் ஆகியோர் போன்ற சிரேஷ்ட வீரர்கள் குழாமில் தெரிவு செய்யப்படவில்லை. மேற்கிந்தியத் தீவுகளின் உள்ளூர் 50 ஓவர்கள் போட்டிகளில் விளையாடுகின்ற வீரர்களையே, ஒருநாள் சர்வதேசப் போட்டிக் குழாமுக்குள் தெரிவுசெய்யும் முறையே தற்போது பின்பற்றப்பட்டு வருகின்றது.

மேற்கிந்தியத் தீவுகள் குழாம்: ஜேஸன் ஹோல்டர் (அணித்தலைவர்), தேவேந்திர பிஷு, ஜொனதன் கார்ட்டர், றொஸ்டன் சேஸ், மைக்கல் கமின்ஸ், ஷனொன் கப்ரியல், ஷாய் ஹோப், அல்ஸாரி ஜோஸெப், எவின் லூயிஸ், ஜேஸன் மொஹமட், அஷ்லி நேர்ஸ், கெரான் பவல், றொவ்மன் பவல்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .