Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 25 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில், பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது.
அபு தாபியில் இடம்பெற்ற இப்போட்டியில், 456 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 4 விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றிந்த நிலையில் இன்றைய நாள் ஆட்டத்தை ஆரம்பித்தது. எனினும், ஆரம்பத்திலேயே 5ஆவது விக்கெட்டை இழந்த அவ்வணி, அதன் பின்னர் 6ஆவது விக்கெட்டுக்காக 53 ஓட்டங்களைப் பகிர்ந்தது. எனினும், தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்த அவ்வணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 322 ஓட்டங்களைப் பெற்று, 150 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
துடுப்பாட்டத்தில், ஜெர்மைன் பிளக்வூட் 95 ஓட்டங்களையும் கிரேய்க் பிறெத்வெய்ட் 67 ஓட்டங்களையும் ஷாய் ஹோப் 41 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் யாசீர் ஷா, 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, இப்போட்டியில் தனது 10 விக்கெட் பெறுதியைப் பதிவுசெய்தார். தவிர சுல்பிகர் பாபர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இப்போட்டியின் நாயகனாக, யாசீர் ஷா தெரிவானார்.
ஸ்கோர் விவரம்:
பாகிஸ்தான்: 452/10 (துடுப்பாட்டம்: யுனிஸ் கான் 127, மிஸ்பா உல் ஹக் 96, அசத் ஷபீக் 68, சப்ராஸ் அஹ்மட் 56. பந்துவீச்சு: ஷனொன் கப்றியல் 5, ஜேஸன் ஹோல்டர் 3)
மேற்கிந்தியத் தீவுகள்: 224/10 (துடுப்பாட்டம்: டெரன் பிராவோ 43. பந்துவீச்சு: யாசீர் ஷா 4, றஹாத் அலி 3, சொஹைல் கான் 2)
பாகிஸ்தான்: 227/2 (துடுப்பாட்டம்: அஸார் அலி 79, அசத் ஷபீக் ஆட்டமிழக்காமல் 58, சமி அஸ்லாம் 50.)
மேற்கிந்தியத் தீவுகள்: 322/10 (துடுப்பாட்டம்: ஜேர்மைன் பிளக்வூட் 95, கேர்க் பிறெத்வெய்ட் 67, ஷாய் ஹோப் 41. பந்துவீச்சு: யாசீர் ஷா 6, சுல்பிகர் பாபர் 2)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .