Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 24 , பி.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான இங்கிலாந்து பிறீமியர் லீக் தொடரில், செல்சியின் மைதானமான ஸ்டாம்போர்ட் பிரிட்ஜில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) இடம்பெற்ற போட்டியில், மன்செஸ்டர் யுனைட்டெட்டை செல்சி தோற்கடித்துள்ளது.
கடந்த 2015/16 பருவகாலத்தின் நடுவினிலே, செல்சியின் முகாமையாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஜொஸ் மொரின்யோ, மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முகாமையாளராக செல்சி மைதானத்துக்கு திரும்பிய இப்போட்டி, பெரும் எதிர்பார்ப்புடன் எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே, யுனைட்டெட்டின் மோசமான தடுப்பாட்டத்தை பயன்படுத்திய செல்சியின் பெட்ரோ, போட்டி தொடங்கி 30 செக்கன்களிலேயே கோலொன்றைப் பெற்று, தனது அணிக்கு முன்னிலையை வழங்கினார். பின்னர், ஈடின் ஹஸார்ட்டின் “கோணர்” ஐ கரி காஹில், போட்டியின் 21 ஆவது நிமிடத்தில் கோலாக்கி, 2-0 என்ற முன்னிலையை வழங்கினார்.
இரண்டாவது பாதியின் 62ஆவது நிமிடத்தில், 15 யார் தூரத்திலிருந்து, ஹஸார்ட் ஒரு கோலினைப் பெற்று, 3-0 என்ற முன்னிலையை வழங்கியதுடன், யுனைட்டெட்டின் தடுப்பினையுடைத்த என்கலோ காண்டே, போட்டியின் 70ஆவது நிமிடத்தில் கோலொன்றைப் பெற, இறுதியில், 4-0 என்ற கோல் கணக்கில் செல்சி வெற்றி பெற்றது.
மன்செஸ்டர் சிற்றி, சௌதாம்டன் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலையே பெற்ற நிலையில், போட்டி சமநிலையில் முடிவடைந்தது. சிற்றியின் ஜோன் ஸ்டோன்ஸ் மேற்கொண்ட தவறான பந்துப்பரிமாற்றத்தினாலேயே, சௌதாம்டன் கோலைப் பெற்றது. பின்னர், லெரோய் சனேயிடமிருந்து பந்தைப் பெற்ற, மாற்று வீரராகக் களமிறங்கிய கெலெச்சி லெகாஞ்சோ பெற்ற கோலின் காரணமாக, போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
இப்போட்டிகளின் முடிவில், மன்செஸ்டர் சிற்றி, ஆர்சனல், லிவர்பூல் ஆகிய அணிகள் 20 புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும், கோல் எண்ணிக்கையின் அடிப்படையில், மன்செஸ்டர் சிற்றி, ஆர்சனல், லிவர்பூல் என்ற வரிசையில், முதல், இரண்டாம், மூன்றாம் இடங்களை வகிக்கின்றன. செல்சி, டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் ஆகிய அணிகள் 19 புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும், கோல் எண்ணிக்கை அடிப்படையில், மூன்றாம், நான்காம் இடங்களை வகிக்கின்றன.
24 minute ago
27 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
27 minute ago
1 hours ago
1 hours ago