Shanmugan Murugavel / 2016 செப்டெம்பர் 13 , பி.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட், கடந்த மே மாதம் நீக்கப்பட்ட, தனது முன்னாள் முகாமையாளர் லூயிஸ் வான் கால் மற்றும் அவரது பயிற்சியாளர்களுக்கு 8.4 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்களை வழங்கியுள்ளது.
இதேவேளை, ஜேர்மனி தேசிய கால்பந்தாட்ட அணியின் முன்னாள் தலைவரான பஸ்டியான் ஸ்வாஞ்டைகருக்கு 6.7 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்களை வழங்க ஒத்துக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
யூரோப்பா லீக் குழாமில் ஸ்வாஞ்டைகர் இடம்பெறாத நிலையில், இப்பருவகாலத்தில் அவர் அணியில் இடம்பெறுவது சந்தேகம் எனக் கூறப்பட்டுள்ளது. ஏனெனில், மத்தியகளவீரர்கள் காயங்களாலோ அல்லது தடையால் பாதிக்கப்பட்டால், இளம் வீரர்களையே, முகாமையாளர் மொரின்யோ குழாமில் உள்ளெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சாதனை ரீதியாக, 515.3 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்களை வருடாந்த வருமானமாகப் பெற்றதாக திங்கட்கிழமை (12) மன்செஸ்டர் யுனைட்டெட் அறிவித்திருந்தது.
30 minute ago
45 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
45 minute ago
1 hours ago