Shanmugan Murugavel / 2016 ஜூன் 15 , மு.ப. 12:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
இடம்பெற்றுவரும் யூரோ 2016 கிண்ணப் போட்டிகளில், 14ஆம் திகதிக்கான போட்டிகளில் ஹங்கேரி அணி வெற்றிபெற்றதோடு, போர்த்துக்கல் - ஐஸ்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டி, சமநிலையில் முடிவடைந்தது.
ஹங்கேரி, ஒஸ்திரிய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில் ஹங்கேரி அணி, 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இப்போட்டியின் முதலாவது பாதியில் கோல்களெவையும் பெறப்படாத நிலையில், 63ஆவது நிமிடத்தில் அடம் ஸலாய், ஹங்கேரி அணிக்கான தனது முதலாவது கோலைப் பெற்றார். 66ஆவது நிமிடத்தில் அலெக்ஸான்டர் ட்ரகோவிச், சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட நிலையில், 10 பேர் கொண்ட அணியாக அவ்வணி மாறியது. அதனைப் பயன்படுத்திய ஹங்கேரி அணி, 87ஆவது நிமிடத்தில் ஸொல்ட்டன் ஸ்தியபர் பெற்ற கோலின் உதவியுடன், 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
இடம்பெற்ற மற்றைய போட்டியில், இளம் அணியான ஐஸ்லாந்து அணி, போர்த்துக்கல் அணிக்கெதிரான போட்டியில் சமநிலையான முடிவைப் பெற்றுக் கொண்டது. போட்டியின் 31ஆவது நிமிடத்தில், போர்த்துக்கல் அணியின் நானி பெற்ற கோலின் உதவியுடன், அவ்வணிக்கு 1-0 என்ற முன்னிலை கிடைத்தது. ஆனால், 50ஆவது நிமிடத்தில் ஐஸ்லாந்தின் பிர்கிர் ஜர்னாசன் பெற்ற கோலின் உதவியுடன், ஐஸ்லாந்து அணி கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தியது. இப்போட்டியில், போர்த்துக்கல் அணி 66 சதவீதமான அளவுக்குப் பந்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த போதிலும், வெற்றிபெற முடியாது போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
5 hours ago
04 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
04 Apr 2026