2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

யூரோ: காலிறுதியில் இத்தாலி, டென்மார்க்

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 27 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

யூரோ கிண்ணத் தொடரின் காலிறுதிப் போட்டிகளுக்கு, இத்தாலி, டென்மார்க் ஆகியன தகுதி பெற்றுள்ளன.

பிரித்தானியாவில் இன்று அதிகாலை நடைபெற்ற ஒஸ்திரியாவுடனான மேலதிக நேரம் வரை சென்ற இறுதி 16 அணிகளுக்கிடையிலான சுற்றுப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்றே காலிறுதிப் போட்டிக்கு இத்தாலி தகுதி பெற்றுள்ளது.

இத்தாலி சார்பாக, பெடெரிக்கோ சியெஸா, மத்தியோ பெஸினா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். ஒஸ்திரியா சார்பாகப் பெறப்பட்ட கோலை சாஸா கலாஸிச் பெற்றிருந்தார்.

இதேவேளை, நெதர்லாந்தில் நேற்றிரவு நடைபெற்ற வேல்ஸுடனான இறுதி 16 அணிகளுக்கிடையிலான சுற்றுப் போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் வென்றே காலிறுதிப் போட்டிக்கு டென்மார்க் தகுதி பெற்றிருந்தது.

டென்மார்க் சார்பாக, கஸ்பர் டொல்பேர்க் இரண்டு கோல்களையும், ஜோகிம் மயெஹ்லே, மார்டின் பிறத்வெய்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .