Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2021 செப்டெம்பர் 17 , பி.ப. 01:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
விராட் கோலி டி20 கேப்டன்சி உதறல் பின்னணி நிலவரம் குறித்து பலவகையான மாறுபட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அதில் குறிப்பாக ரோகித் சர்மாவை ஒருநாள் அணி துணைக்கேப்டன் பொறுப்பிலிருந்து கோலி தூக்கச் சொன்னதாக ஏஜென்சி செய்தி ஒன்று வெளியிட்டுள்ளது அதிர்ச்சியலைகளை உருவாக்கியுள்ளது.
கோலி-ரோகித் சர்மாவிடையே சரியான உறவு இல்லை என்ற செய்திகள் கொஞ்ச காலமாகவே உலா வந்தவண்ணம் இருந்தன.
கோலி தனக்கு அடுத்தபடியாக 2 ஆவது இடம் யாருக்குச் செல்லும் என்று லேசாகத் தெரிந்தாலும் அவரை அணியிலிருந்து நீக்கி விடுவார், ரகானே ஒரு உதாரணம், அஸ்வின் இன்னொரு உதாரணம், இப்போது ரோகித் சர்மா என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
பிடிஐ செய்தி ஏஜென்சியின் தகவல்களின்படி, 34 வயதாகி விட்டது எனவே ரோகித் சர்மாவை துணைக் கேப்டன் பொறுப்பிலிருந்து தூக்கி விட்டு கே.எல்.ராகுலை நியமிக்கக் கோலி கோரியாதாகவும் டி20-யிலும் தனக்கு துணையாக ரிஷப் பந்த்தை துணைக் கேப்டனாக நியமிக்குமாறும் கோலி நிர்பந்தித்துள்ளார். கோலிக்கே வயது 32 ஆகிறது. அதாவது தனக்கு அடுத்ததாக ஒருவரை கோலி விரும்பவில்லை என்பதாகவே கிரிக்கெட் வாரியம் கருதியதாக பிடிஐயிடம் பிசிசிஐ சோர்ஸ் ஒன்று கூறியுள்ளது.
எப்படியிருந்தாலும் உலகக்கோப்பை டி20-யை வெல்லவில்லை எனில் வெள்ளைப்பந்து கிரிக்கெட் இந்திய அணியின் கேப்டன்சி தன்னிடமிருந்து பறிக்கப்படும் என்பதை அறிந்தே கோலி தானே விலகுவதாக அறிவித்துள்ளதாக அந்த செய்திகள் கூறுகின்றன. இது அவர் மீது அவருக்கேயுள்ள அழுத்தத்தை குறைத்திருக்கும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 May 2025
20 May 2025
20 May 2025