Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 16 , பி.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இடம்பெற்று வரும் றியோ ஒலிம்பிக் போட்டிகளின் பெண்களுக்கான 400 மீற்றர் இறுதிப் போட்டியின் முடிவிடத்தில் நிலை தடுமாறி பின்னர் பாய்ந்த பஹ்மாஸ் வீராங்கனை ஷோனாயி மில்லர் தங்கம் வென்றார்.
.jpg)
த்ரில்லாக அமைந்த மேற்படி ஓட்டப் போட்டியில், ஐக்கிய அமெரிக்காவின் உலக சம்பியனான அலிஸன் ஃபீலிக்ஸை தோற்கடித்து, 49.44 செக்கன்களில் போட்டித் தூரத்தைக் கடந்தே மில்லர் தங்கம் வென்றார். 49.51 செக்கன்களில் போட்டித் தூரத்தை நிறைவு செய்த ஃபீலிக்ஸ் வெள்ளிப் பதக்கத்தை வென்றதுடன், ஜமைக்காவின் ஷெரிக்கா ஜக்ஸன் வெண்கலப் பதக்கம் வென்றார்.
.jpg)
இந்நிலையில், கருத்துத் தெரிவித்த 22 வயதான மில்லர், தங்கப் பதக்கத்தை மட்டுமே தான் நினைத்ததாகவும், அடுத்த விடயம், தான் நிலத்தில் இருப்பது தனக்குத் தெரியும் என்று கூறியுள்ளார்.
இதேவேளை, 2012ஆம் ஆண்டு இலண்டன் ஒலிம்பிக் 200 மீற்றர் ஓட்டத்தில் தங்கம் வென்ற பீலிக்ஸ், மூன்று அஞ்சலோட்ட தங்கப் பதக்கங்களுடன் தற்போது ஏழு ஒலிம்பிக் பதக்கங்களை கொண்டுள்ளார். இந்தப் பதக்க எண்ணிக்கையானது, பெண்ணொருவரினால் பெறப்பட்ட அதிக ஒலிம்பிக் பதக்கங்கள் ஆகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .