2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

றியோவைச் சென்றடைந்தார் உசைன் போல்ட்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 29 , மு.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்னும் சில நாட்களில் பிரேஸிலின் றியோ டி ஜெனீரோவில் ஆரம்பிக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றவுள்ள ஜமைக்க அணியின் உசைன் போல்ட், றியோ டி ஜெனீரோவை நகரைச் சென்றடைந்துள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்பக நிகழ்வுக்கு ஒரு வாரத்துக்கும் அதிகமான காலம் உள்ள போதிலும் கூட, தனது தயார்படுத்தல்களை மேம்படுத்துவதற்காக, றியோவை அவர் சென்றடைந்துள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதிபெறுவதற்கான ஜமைக்காவின் தகுதிகாண் போட்டிகளில், பின்தொடைத் தசைநார் உபாதை காரணமாகப் பங்குபற்றியிருக்காத உசைன் போல்ட், தனது உடற்றகுதியை நிரூபிக்கும்பட்சத்தில் ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதிபெறுவார் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, இலண்டன் டயமொன்ட் லீக் போட்டிகளில் பங்குபற்றிய அவர், 200 மீற்றர் ஓட்டப் போட்டியை 19.89 செக்கன்களில் நிறைவுசெய்து, தனது உடற்றகுதியை நிரூபித்திருந்தார்.

இந்நிலையிலேயே, 100 மீற்றர், 200 மீற்றர், 4*100 மீற்றர் அஞ்சலோட்டம் ஆகியவற்றில் மூன்று தொடர்ச்சியான ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற முதலாவது வீரர் என்ற சாதனையைப் படைக்கும் நோக்குடன், இம்முறை அவர் களமிறங்கியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .