2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

லா லிகா தொடர்: பார்சிலோனா- சொஸைடட் போட்டி சமநிலை

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 28 , மு.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) இடம்பெற்ற பார்சிலோனா, றியல் சொஸைடட் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்ததுடன், ஒஸசுனா அணியை அத்லெட்டிகோ மட்ரிட் வென்றிருந்தது.

பார்சிலோனா, றியல் சொஸைடட் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்ற நிலையில், போட்டி சமநிலையில் முடிவடைந்தது. பார்சிலோனா சார்பாக பெறப்பட்ட கோலினை லியனல் மெஸ்ஸி பெற்றிருந்தார்.

இப்போட்டியின் முடிவில், லா லிகா புள்ளிகள் தரவரிசையில் 27 புள்ளிகளைப் பெற்றுள்ள பார்சிலோனா, தரவரிசையில் முதலிடத்தில் உள்ள றியல் மட்ரிட்டை விட ஆறு புள்ளிகள் குறைவாகவுள்ளது. இந்நிலையிலேயே, அடுத்த வாரம் றியல் மட்ரிட்டை பார்சிலோனா எதிர்கொள்ளவுள்ளது.

அத்லெட்டிகோ மட்ரிட், 3-0 என்ற கோல் கணக்கில் ஒஸசுனா அணியைத் தோற்கடித்து, லா லிகா புள்ளிகள் தரவரிசையில் நான்காமிடத்துக்கு முன்னேறியது. அத்லெட்டிகோ சார்பாக, டியகோ கோடின், கெவின் கமேய்ரோ, யனிக் கராஸ்கோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .