Shanmugan Murugavel / 2016 ஏப்ரல் 17 , மு.ப. 03:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழங்களுக்கிடையே இடம்பெற்று வரும் லா லிகா தொடரின் கடந்த சனிக்கிழமை (16) இடம்பெற்ற போட்டியில் வெற்றி பெற்ற றியல் மட்ரிட், தமக்கும் லா லிகா புள்ளிகள் தரவரிசையில் முன்னிலையில் பார்சிலோனாவுக்குமிடையிலான புள்ளிகள் வித்தியாசத்தை ஒன்றாக் குறைத்துக் கொண்டுள்ளது.
றியல் மட்ரிட், கெட்டாபே ஆகிய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில், 5-1 என்ற கோல்கணக்கில் றியல் மட்ரிட் வெற்றி பெற்றது. இப்போட்டியில் றியல் மட்ரிட் சார்பாக பெறப்பட்ட கோல்களை கரிம் பென்ஸீமா, இஸ்கோ, கரித் பேல், ஜேம்ஸ் ரொட்ரிகாஸ், கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் கோல்களைப் பெற்றனர்.
இப்போட்டியில் பெற்ற வெற்றியுடன் 75 புள்ளிகளைப் பெற்றுள்ள றியல் மட்ரிட், லா லிகா புள்ளிகள் தரவரிசையில் இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளதோடு, 76 புள்ளிகளுடன் பார்சிலோனா முதலிடத்திலும் அத்லெட்டிகோ மட்ரிட் 73 புள்ளிகளுடன் மூன்றமிடத்திலும் காணப்படுகின்றது.
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago