Shanmugan Murugavel / 2016 டிசெம்பர் 19 , பி.ப. 01:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் லா லிகா தொடரில், இலங்கை நேரப்படி இன்று (19) அதிகாலை இடம்பெற்ற போட்டியொன்றில் பார்சிலோனா வெற்றி பெற்றுள்ளது.
பார்சிலோனா, 4-1 என்ற கோல் கணக்கில் அஸ்பன்யோலைத் தோற்கடித்தது. போட்டியின் 18ஆவது நிமிடத்தில் தனித்துச் சென்று கோலைப் பெற்ற லூயிஸ் சுவாரஸ் கோலொன்றைப் பெற்று பார்சிலோனாவுக்கு முன்னிலையை வழங்கியதுடன், மெஸ்ஸியிடமிருந்து பந்தைப் பெற்று தனது இரண்டாவது கோலைப் பெற்றிருந்தார். 68ஆவது நிமிடத்தில் ஜோர்டி அல்பா பெற்ற கோலுக்கான பந்தை வழங்கியிருந்த லியனல் மெஸ்ஸி, போட்டியின் இறுதி நிமிடத்தில் தான் ஒரு கோலைப் பெற்றிருந்தார்.
இப்போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் லா லிகா புள்ளிகள் தரவரிசையில் 34 புள்ளிகளைப் பெற்றுள்ள பார்சிலோனா, முதலிடத்திலுள்ள றியல் மட்ரிட்டை விட மூன்று புள்ளிகள் குறைவாகவுள்ளது. றியல் மட்ரிட், பார்சிலோனாவை விட ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
18 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
47 minute ago