Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 23 , மு.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையில் இடம்பெற்றுவரும் பிறீமியர் லீக் தொடரில், நேற்றுச் சனிக்கிழமை (22), இடம்பெற்ற போட்டிகளில், லிவர்பூல், லெய்செஸ்டர் சிற்றி ஆகிய அணிகள் வெற்றி பெற்றதுடன், ஆர்சனல், மிடில்ஸ்பேர்க் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியும் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், போர்ண்மெத் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியும் சமநிலையில் முடிவடைந்தது.
லிவர்பூல், வெஸ்ட் ப்ரோம்விச் அல்பியன் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற லிவர்பூல், பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில், இரண்டாமிடத்துக்கு முன்னேறியது. இறுதி நேரத்தில், வெஸ்ட் ப்ரோம்விச் கோலினைத் தடுத்திருந்தால், முதலாவது இடத்துக்கு லிவர்பூல் முன்னேறியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. லிவர்பூல் சார்பாக, ரொபேர்ட்டோ பெர்மின்ஹோவிடமிருந்து பந்தைப் பெற்ற சாடியோ மனே, முதலாவது கோலைப் பெற்றதுடன், சாடியோ மனேயிடமிருந்து பந்தைப் பெற்ற பிலிப்பே கூட்டினியோ, இரண்டாவது கோலைப் பெற்றார்.
ஆர்சனல், மிடில்ஸ்பேர்க் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாத நிலையில், போட்டி சமநிலையில் முடிவடைந்தது. கோல் கம்பத்தை நோக்கி, ஆர்சனலினால் ஐந்து உதைகள் அடிக்கப்பட்டிருந்தபோதும் அலெக்சிஸ் சந்தேஸின் உதை மாத்திரமே, கோல் பெறுவதுபோல் இருந்தது. ஆர்சனலின் கோல் காப்பாளர் பீற்றர் செக், மூன்று உதைகளைத் தடுத்திருந்தார்.
டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், போர்ண்மெத் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாத நிலையில், போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இப்போட்டியில், டொட்டென்ஹாம் வெற்றி பெற்றால், பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில், முதலிடத்துக்குச் சென்றிருக்கும்.
லெய்செஸ்டர் சிற்றி, கிறிஸ்டல் பலஸ் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 3-1 என்ற கோல் கணக்கில் லெய்செஸ்டர் சிற்றி வெற்றி பெற்றது. லெய்செஸ்டர் சிற்றி சார்பாக, அஹ்மெட் மூஸா, ஷிஞ்சி ஒகஸாகி, கிறிஸ்டியன் புஷ்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago