Shanmugan Murugavel / 2025 ஏப்ரல் 20 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகாத் தொடரில், லாஸ் பல்மாஸின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் அத்லெட்டிகோ மட்ரிட் தோற்றது.
லாஸ் பல்மாஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜேவியர் முனோஸ் பெற்றிருந்தார்.
லா லிகா புள்ளிகள் தரவரிசையில் 73 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் பார்சிலோனா காணப்படுகின்றது. 66 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட்டும், 63 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் அத்லெட்டிகோ மட்ரிட்டும், 57 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் அத்லெட்டிக் பில்பாவோவும் காணப்படுகின்றன. இதில் றியல் மட்ரிட்டும், அத்லெட்டிகோ பில்பாவோவும் மற்றைய அணிகளை விட தலா ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளன.
22 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
40 minute ago