Shanmugan Murugavel / 2021 ஏப்ரல் 12 , மு.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், வெஸ்ட் ஹாம் யுனைட்டெட்டின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணிக்கும், லெய்செஸ்டர் சிற்றிக்குமிடையிலான போட்டியில், 3-2 என்ற கோல் கணக்கில் அவ்வணி வென்றது.
வெஸ்ட் ஹாம் சார்பாக, ஜெஸி லிங்கார்ட் இரண்டு கோல்களையும், ஜரோட் பெளவன் ஒரு கோலையும் பெற்றனர். லெய்செஸ்டர் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் கெலச்சி லெகாஞ்சோ பெற்றிருந்தார்.
இதேவேளை, டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் வென்றது. யுனைட்டெட் சார்பாக, பிரட், எடின்சன் கவானி, மேஸன் கிறீன்வூட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். டொட்டென்ஹாம் சார்பாகப் பெறப்பட்ட கோலை சண் ஹெயுங்-மின் பெற்றிருந்தார்.
அந்தவகையில், பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 74 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் மன்செஸ்டர் சிற்றியும், 63 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் யுனைட்டெட்டும், 56 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் லெய்செஸ்டரும், 55 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் வெஸ்ட் ஹாமும் காணப்படுகின்றன. இதில், மற்றைய அணிகளை விட சிற்றி ஒரு போட்டி அதிகமாக விளையாடியுள்ளது.
5 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026