Shanmugan Murugavel / 2021 ஜனவரி 10 , மு.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜேர்மனிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெஸ்லீகா தொடரில், ஆர்.பி லெய்ப்ஸிக்கின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் பொரூசியா டொட்டமுண்ட் வென்றது.
டொட்டமுண்ட் சார்பாக, எர்லிங் பிறோட் ஹலான்ட் இரண்டு கோல்களையும், ஜடோன் சஞ்சோ ஒரு கோலையும் பெற்றனர். லெய்ப்ஸிக் சார்பாகப் பெறப்பட்ட கோலை அலெக்ஸான்டர் சொர்லொத் பெற்றிருந்தார்.
இந்நிலையில், பயேர் லெவர்குசனின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும், வேர்டர் பிறவுணுக்குமிடையிலான போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்திருந்தது. லெவர்குசன் சார்பாகப் பெறப்பட்ட கோலை பற்றிச் ஸ்சிச் பெற்றிருந்ததோடு, வேர்டர் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஓமர் டொப்ரக் பெற்றிருந்தார்.
இப்போட்டிகளின் முடிவில் புண்டெலிஸ்கா புள்ளிகள் பட்டியலில் 33 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் நடப்புச் சம்பியன்கள் பயேர்ண் மியூனிச் உள்ளது. 31 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் லெய்ப்ஸிக்கும், 29 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் லெவர்குசனும், 28 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் டொட்டமுண்டும் காணப்படுகின்றன.
6 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
12 Apr 2026
12 Apr 2026