Shanmugan Murugavel / 2016 செப்டெம்பர் 15 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிற்சல் ஸ்டார்க், கணைக்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக, வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
சிட்னியில் இடம்பெற்ற அவுஸ்திரேலிய அணியின் பயிற்சியின் போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அவரது இடது கணைக்காலில் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
பயிற்சியின் போது, பயிற்சி உபகரணமொன்றுடன் அவர் மோதியுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்தே அவருக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தென்னாபிரிக்க அணிக்கெதிராக இடம்பெறவுள்ள ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான பயிற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தொடரிலிருந்து, ஜேம்ஸ் ஃபோக்னர், ஷோன் மார்ஷ் இருவரும் காயம் காரணமாக ஏற்கெனவே வெளியேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Apr 2026