2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

வெற்றிக்கான அடித்தளத்துடன் இலங்கை

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 16 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் எஸ்.எஸ்.சி மைதானத்தில் இடம்பெற்றுவரும் மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்ட முடிவில், தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கையணி, எட்டு விக்கெட்டுகளை இழந்து 312 ஓட்டங்களைப் பெற்று, 288 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.

தற்போது களத்தில், தனஞ்சய டி சில்வா 44 ஓட்டங்களுடனும் சுரங்க லக்மால் ஓட்டமெதனையும் பெறாமலும் உள்ளனர்.

முன்னதாக, கையில் ஆறு தையல்களுடனும் துடுப்பெடுத்தாடிய கௌஷால் சில்வா, பெரும் அழுத்தங்களுக்கு மத்தியில் சதம் பெற்றிருந்தார். அவுஸ்திரேலிய அணி முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடும் போது களத்தடுப்பில் ஈடுபட்டிருக்கும்போதே கௌஷால் சில்வா காயமடைந்திருந்தார்.

கௌஷால் சில்வாவின் 115 ஓட்டங்கள் தவிர, தினேஷ் சந்திமால் 43 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக நேதன் லையன் நான்கு விக்கெட்டுகளையும் மிற்செல் ஸ்டார்க், ஜோன் ஹொலாண்ட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

முன்னதாக, தமது முதலாவது இனிங்ஸில், சகல விக்கெட்டுகளையும் இழந்து 379 ஓட்டங்களை அவுஸ்திரேலிய அணி பெற்றிருந்தது. ஷோர்ன் மார்ஷ் 130 ஓட்டங்களையும் ஸ்டீவன் ஸ்மித் 119 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். பந்துவீச்சில் ரங்கன ஹேரத் ஆறு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இலங்கையணி, தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 355 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. தினேஷ் சந்திமால் 132 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 132 ஓட்டங்களையும் பெற்றனர். மிற்செல் ஸ்டார்க் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.

இலங்கையணி தற்போது 288 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ள நிலையில், ஆசியாவில் வைத்து குறித்த 288 ஓட்டங்களை விட அதிகமாக ஒரு தடவையே தமது நான்காவது இனிங்ஸில் அவுஸ்திரேலியா ஓட்டங்களைப் பெற்றுள்ளது. 2006ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணியில் பல நட்சத்திர வீரர்கள் இருக்கையில், பங்களாதேஷுக்கெதிராகவே குறித்த ஓட்ட எண்ணிக்கை பெறப்பட்டிருந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .