Shanmugan Murugavel / 2016 நவம்பர் 09 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
வேல்ஸ் கால்பந்தாட்ட வீரருக்கான விருதை, றியல் மட்ரிட் கழகத்தின் கரித் பேல், 6ஆவது தடவையாகவும் வெற்றிகொண்டுள்ளார். இவ்விருதை அவர் தொடர்ச்சியாக வெல்லும் 4ஆவது தடவை இதுவாகும்.
வேல்ஸ் கால்பந்தாட்டச் சங்கம், சிறந்த கால்பந்தாட்ட வீரர்களுக்காக வருடாந்தம், விருதுகளை வழங்கி வருகிறது. இவ்விருதுகள், 1998ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டன.
இதற்கு முன்னர் 2010, 2011ஆம் ஆண்டுகளில், டொட்டென்ஹம் ஹொட்ஸ்பர்ஸ் அணிக்காக விளையாடும் போது வென்றிருந்த கரித் பேல், 2013ஆம் ஆண்டிலிருந்து, தொடர்ச்சியாக இவ்விருதை வென்றுள்ளார்.
யூரோ கிண்ணப் போட்டிகளில், வேல்ஸ் அணி அரையிறுதிப் போட்டிகள் வரை முன்னேறுவதற்குப் பங்களித்திருந்த பேல், சம்பியன்ஸ் லீக் போட்டிகளில் றியல் மட்ரிட் அணி, சம்பியன் பட்டம் வெல்வதற்கும் பங்களித்திருந்தார்.
வீரர்களின் தெரிவு விருதும் இரசிகர்களின் தெரிவு விருதும், ஸ்டோக்ஸ் சிற்றி அணியின் ஜோ அலெனுக்குக் கிடைத்தது. ஆண்டின் சிறந்த இளம் வீரராக, எதன் அம்படு தெரிவானார்.
சிறந்த கால்பந்தாட்ட வீராங்கனை விருதை, நட்டாஷா ஹார்டிங் வெற்றிகொள்ள, பெண்களில் வீராங்கனைகளின் விருதும் இரசிகர்களின் விருதும், சோபி இங்லே-க்குக் கிடைத்தது. பெண்களில் சிறந்த இளம் வீராங்கனையாக, ப்ரோன்வென் தோமஸ் தெரிவானார். ஊடகங்களின் விருது, றீடிங்ஸ் அணியின் கிறிஸ் கன்டருக்குக் கிடைத்தது.
இவற்றுக்கு மேலதிகமாக, சர்வதேச கால்பந்தாட்டச் சங்கத்தில், சிறந்த ஆண் கால்பந்தாட்டப் பயிற்றுநர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள கிறிஸ் கோல்மன்-க்கு, விசேட விருதொன்றும் வழங்கப்பட்டது.
26 minute ago
29 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
29 minute ago
1 hours ago
1 hours ago