2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

விளையாடாத போட்டியில் விளையாடத் தடை

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 22 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் மிஸ்பா உல் ஹக்குக்கு, ஒரு போட்டியில் விளையாடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி, 2 ஓவர்கள் குறைவாகப் பந்துவீசியமையால், அவரது போட்டி ஊதியத்தின் 40 சதவீதம், அபராதமாக விதிக்கப்பட்டது. அணி வீரர்களுக்கு, 20 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.

அத்தோடு, கடந்த 12 மாதகாலத்தில், ஏற்கெனவே ஒரு தடவையும் இந்தக் குற்றத்தில் அவர் சிக்கியிருந்த நிலையில், மிஸ்பாவுக்கு ஒரு போட்டித் தடை விதிக்கப்பட்டது.

ஆனால், தனது மாமனார் உயிரிழந்ததைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்குத் திரும்பிய மிஸ்பா, 2ஆவது போட்டியில் பங்குபற்ற மாட்டார் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .