2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

விளக்கம் கோருகிறது தென்னாபிரிக்கா

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 23 , பி.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இனிப்பை வாயில் வைத்தபடி பந்தை மினுக்கியமையின் மூலம், செயற்கையான பதார்த்தங்களின் உதவியுடன் பந்தை மினுக்கக்கூடாது என்ற விதியை, தென்னாபிரிக்க அணித் தலைவர் ஃபப் டு பிளெஸி மீறினார் என்பது தொடர்பாக, தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை, விளக்கங்களைக் கோரியுள்ளது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அக்கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி, "புரிந்து கொள்ளப்படத்தக்கது. இந்தத் தீர்ப்புத் தொடர்பாக ஃபப் உண்மையில் ஏமாற்றமடைந்துள்ளார். அதை நான் புரிந்து கொள்கிறேன்" என்றார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், "செயற்கையான பதார்த்தம் என்பதை கிரிக்கெட்டின் விதிகள் தற்போது வரைவிலக்கணப் படுத்துவதில்லை என தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை கருதுகிறது" என்று தெரிவித்த அவர், இது தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் சபை தெளிவான விளக்கத்தை வழங்குமாறு கோரினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .