Shanmugan Murugavel / 2025 ஜனவரி 28 , பி.ப. 01:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகாத் தொடரில், தமது மைதானத்தில் திங்கட்கிழமை (27) அதிகாலை நடைபெற்ற வலென்சியாவுடனான போட்டியில் 7-1 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வென்றது.
பார்சிலோனா சார்பாக பெர்மின் லொபேஸ் இரண்டு கோல்களையும், பிரெங்கி டி ஜொங்க், பெரன் டொரஸ், றபீனியா, றொபேர்ட் லெவன்டோஸ்கி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் முறையில் பெறப்பட்டிருந்தது.
லா லிகா புள்ளிகள் பட்டியலில் 49 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட் காணப்படுகின்றது. 45 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் அத்லெட்டிகோ மட்ரிட்டும், 42 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் பார்சிலோனாவும், 40 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் அத்லெட்டிக் பில்பாவோவும் காணப்படுகின்றன.
19 minute ago
25 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
25 minute ago
38 minute ago