Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 மே 27 , பி.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடர், நேற்று ஆரம்பித்திருந்த நிலையில், நேற்று இடம்பெற்ற தனது முதலாவது சுற்றுப் போட்டியில் ஐக்கிய அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸை, உலகின் ஒன்பதாம் நிலை வீராங்கனையான உக்ரேனின் எலினா ஸ்விட்டோலினா வென்றார்.
தனது முதலாவது சுற்றுப் போட்டியில், 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வீனஸ் வில்லியம்ஸை வென்ற எலினா ஸ்விட்டோலினா இரண்டாவது சுற்றுப் போட்டிக்கு முன்னேறினார்.
இந்நிலையில், நேற்று இடம்பெற்ற தனது முதலாவது சுற்றுப் போட்டியில், 4-6, 2-6 என்ற நேர் செட்களில் ரஷ்யாவின் அனஸ்டசியா பொடபோவாவிடம் தோல்வியுற்ற உலகின் ஐந்தாம் நிலை வீராங்கனையான அங்கெலிக் கேர்பர், தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இதேவேளை, நேற்று இடம்பெற்ற தனது முதலாவது சுற்றுப் போட்டியில், ஐக்கிய அமெரிக்காவின் மடிஸன் பிரங்கிளை எதிர்கொண்ட உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, 6-2, 6-3 என்ற நேர் செட்களில் வென்று இரண்டாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
இந்நிலையில், நேற்று இடம்பெற்ற தனது முதலாவது சுற்றுப் போட்டியில், ஜப்பானின் மிஸாகி டொய்யை எதிர்கொண்ட உலகின் ஏழாம் நிலை வீராங்கனையான ஐக்கிய அமெரிக்காவின் சொலனி ஸ்டீவன்ஸ், 6-3, 7-6 (7-4) என்ற நேர் செட்களில் வென்று இரண்டாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
இதேவேளை, நேற்று இடம்பெற்ற தனது முதலாவது சுற்றுப் போட்டியில், இத்தாலியின் லொரென்ஸோ சொனெகோவை எதிர்கொண்ட உலகின் மூன்றாம்நிலை வீரரான சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர், 6-2, 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வென்று இரண்டாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
இந்நிலையில், நேற்று இடம்பெற்ற தனது முதலாவது சுற்றுப் போட்டியில், ஜேர்மனியின் மக்ஸிமில்லியன் மார்டெரரை எதிர்கொண்ட உலகின் ஆறாம் நிலை வீரரான கிரேக்கத்தின் ஸ்டெபனோஸ் சிட்டிபாஸ், 6-2, 6-2, 7-6 (7-4) என்ற நேர் செட்களில் வென்று இரண்டாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
இதேவேளை, நேற்று இடம்பெற்ற தனது முதலாவது சுற்றுப் போட்டியில், பிரெஞ்சின் குவென்டிஸ் ஹலீஸை எதிர்கொண்ட உலகின் ஏழாம் நிலை வீரரான கீ நிஷிகோரி, 6-2, 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வென்று இரண்டாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
2 hours ago
2 hours ago