Shanmugan Murugavel / 2025 ஏப்ரல் 21 , பி.ப. 07:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

சவுதி அரேபிய குரான் பிறீயை வென்ற மக்லரென் அணியின் ஒஸ்கார் பியாஸ்திரி, இவ்வாண்டுக்கான போர்மியுலா வண் சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பெற்றார்.
ஞாயிற்றுக்கிழமை (20) நடைபெற்ற பந்தயத்தை இரண்டாமிடத்திலிருந்து ஆரம்பித்து அவுஸ்திரேலியாவின் பியாஸ்திரி முதலாமிடத்தைப் பெறந்தோடு, பந்தயத்தை முதலாமிடத்திலிருந்து ஆரம்பித்த நடப்புச் சம்பியனான மக்ஸ் வெர்ஸ்டப்பன் இரண்டாமிடத்தைப் பெற்றதோடு, பந்தயத்தை நான்காமிடத்திலிருந்து ஆரம்பித்த பெராரி அணியின் சார்ள்ஸ் லெக்கலெர்க் மூன்றாமிடத்தைப் பெற்றார்.
பந்தயத்தின் முதலாவது வளைவில் ஓடுபாதைக்கு வெளியே சென்று பியாஸ்திரியை முந்திய றெட் புல் அணியின் வெர்ஸ்டப்பன் ஐந்து செக்கன்கள் தண்டத்தைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாண்டுக்கான சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 99 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் பியாஸ்திரி காணப்படுகின்றார். 89 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் பியாஸ்திரியின் சக மக்லரென் அணி ஓட்டுநரான லான்டோ நொரிஸும், 87 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் நெதர்லாந்தின் வெர்ஸ்டப்பனும் காணப்படுகின்றனர்.
21 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
39 minute ago