Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மே 30 , மு.ப. 01:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட வீரர்களான டேவிட் வோணரும் கமரொன் பான்க்ரொப்டும், கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் விளையாடவுள்ளனர். நாட்டின் வடக்குப் பகுதியிலுள்ள, மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டித் தொடரொன்றில், எதிர்வரும் ஜூலை முதல், இவர்கள் விளையாடவுள்ளனர்.
தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியொன்றில், பந்தைச் சேதப்படுத்தியதன் மூலம், தமக்கான அனுகூலத்தைப் பெற முயன்ற குற்றத்துக்காக, அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையால், அணித் தலைவராக இருந்த ஸ்டீவ் ஸ்மித்துக்கும் உப தலைவராக இருந்த டேவிட் வோணருக்கும், ஓராண்டுக்குத் தடை விதிக்கப்பட்டது. அக்குற்றத்தைப் புரிந்த பான்க்ரொப்டுக்கு, 9 மாதங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜூலை 21, 22ஆம் திகதியில் இடம்பெறவுள்ள இரண்டு போட்டிகளில் வோணர் விளையாடவுள்ளதோடு, தொடர் முழுவதற்கும், பான்க்ரொப்ட் விளையாடவுள்ளார்.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையால் விதிக்கப்பட்ட தடைகளின் அடிப்படையில், சர்வதேசப் போட்டிகளிலும் உள்ளூர்ப் போட்டிகளிலும் விளையாடத் தடை விதிக்கப்பட்டது. ஆனால், உள்ளூர் மூன்றாம் நிலை கழகப் போட்டிகளிலும் வெளிநாடுகளில் இடம்பெறும் இருபதுக்கு-20 தொடர்களிலும் விளையாட அனுமதிக்கப்பட்டது.
இதேவேளை, தடை விதிக்கப்பட்ட மூன்றாமவரான ஸ்டீவ் ஸ்மித், கனடாவில் இடம்பெறவுள்ள இருபதுக்கு-20 தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இத்தொடர், ஜூன் மாத இறுதியில் ஆரம்பிக்கவுள்ளது.
இத்தொடரிலும், வோணர் பங்குபற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளனவெனக் கருதப்படுகிறது.
23 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
3 hours ago