2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

ஷங்காய் மாஸ்டர்ஸ்: சம்பியனானார் மரே

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 16 , பி.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்று வந்த ஷங்காய் மாஸ்டர்ஸ் கிண்ணப் போட்டிகளின் சம்பியனாக, உலகின் இரண்டாம் நிலை வீரரான பெரிய பிரித்தானியாவின் அன்டி மரே தெரிவாகியுள்ளார். ஸ்பெய்னைச் சேர்ந்த றொபேர்ட்டோ வல்கீஸ்ட்டா அகுட்டை  எதிர்கொண்டு வெற்றிபெற்றே, இச்சம்பியன் பட்டத்தை, மரே பெற்றார்.

நடப்பு விம்பிள்டன், ஒலிம்பிக் ஆகியவற்றின் சம்பியனான அன்டி மரே, 19ஆம் நிலை வீரரான றொபேர்டோவிடமிருந்து, முதலாவது செட்டில், கடுமையான போட்டியை எதிர்கொண்டார். இருவருமே 1-1, 2-2, 3-3, 5-5, 6-6 என்ற நிலையில் காணப்பட, டை பிரேக்கர் முறைக்கு, இந்த செட் மாறியது. அந்த டை பிரேக்கரை மரே, 7-1 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றினார்.
இரண்டாவது செட்டில், ஆரம்பத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்திய மரே, 6-1 என்ற செட் கணக்கில் அந்த செட்டைக் கைப்பற்றி, போட்டியில் வெற்றிபெற்று, சம்பியன் பட்டம் வென்றார்.

அவரது இந்த வெற்றியைத் தொடர்ந்து, உலகின் முதல்நிலை வீரரான சேர்பியாவின் நொவக் ஜொக்கோவிச்சுக்கும் அன்டி மரேக்கும் இடையிலான புள்ளிகள் வித்தியாசம், வெகுவாகக் குறைவடைந்துள்ளது.இதன்படி, இவ்வாண்டு முடிவில், தரப்படுத்தலில் முதலிடத்தைக் கைப்பற்றும் மரேயின் கனவு, இன்னமும் உயிர்ப்புடன் காணப்படுகிறது.

இவ்வாண்டில் சீன பகிரங்க டென்னிஸ், றியோ ஒலிம்பிக்ஸ், விம்பிள்டன், ஏகோன் சம்பியன்ஷிப்ஸ், ஏ.டி.பி உலகத் தொடர் - 1000 மாஸ்டர்ஸ் றோம், தற்போது ஷங்காய் தொடர் ஆகியவற்றின் சம்பியன் பட்டம் வென்றுள்ள மரே, ஷங்காய் தொடரை, இதுவரை 3 தடவைகள் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .