Shanmugan Murugavel / 2025 ஓகஸ்ட் 27 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான ஸஸுலோவில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முன்னாள் மத்தியகளவீரரான நெமஞ்சா மட்டிச் ஓராண்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக அக்கழகம் செவ்வாய்க்கிழமை (26) தெரிவித்துள்ளது.
பிரெஞ்சு லீக் 1 கழகமான லயோனுடனான 37 வயதான மட்டிச்சின் ஒப்பந்தமானது இரு தரப்பு இணக்கத்துடன் இரத்துச் செய்யப்பட்டிருந்தது.
இன்னொரு பிறீமியர் லீக் கழகமான செல்சியிலும் நீண்ட காலம் விளையாடியிருந்த மட்டிச், 2022-23 பருவகாலத்தில் இன்னொரு சீரி ஏ கழகமான றோமாவுக்காகவும் விளையாடியிருந்தார்.
மட்டிச்சின் ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட அடைவுகள் அடைந்தால் தானாகவே இரண்டாவது பருவகாலத்துக்கு ஒப்பந்தம் புதுப்பிக்கப்படுவதும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
6 minute ago
38 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
38 minute ago
46 minute ago