Shanmugan Murugavel / 2016 நவம்பர் 10 , மு.ப. 08:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வே,இலங்கை அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2ஆவது போட்டியில், அணித்தலைவர் ரங்கன ஹேரத் கைப்பற்றிய 13 விக்கெட்டுகளின் துணையோடு, இலங்கை அணிக்குச் சிறப்பான வெற்றி கிடைத்தது.
போட்டியின் 5ஆவது நாளான இன்று, 7 விக்கெட்டுகளை இழந்து 180 ஓட்டங்களுடன் களமிறங்கிய சிம்பாப்வே அணி, 233 ஓட்டங்களுக்கே சகல விக்கெட்டுகளையும் இழந்து, 257 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. வீழ்த்தப்பட்ட 3 விக்கெட்டுகளையும், ரங்கன ஹேரத் வீழ்த்தி, இனிங்ஸில் தனது 8ஆவது விக்கெட்டையும் போட்டியில் 13ஆவது விக்கெட்டையும் கைப்பற்றினார்.
இப்போட்டியின் நாயகனாக ரங்கன ஹேரத் தெரிவானதோடு, தொடரின் நாயகனாக திமுத் கருணாரத்ன தெரிவானார்.
ஸ்கோர் விவரம்:
இலங்கை: 504/10 (துடுப்பாட்டம்: தனஞ்சய டி சில்வா 127, அசேல குணரத்ன 116, உபுல் தரங்க 79 ஓட்டங்கள். பந்துவீச்சு: டொனால்ட் ட்ரிபானோ 3/91, கிறேம் கிறீமர் 3/136, ஹமில்டன் மஸகட்ஸா 2/34)
சிம்பாப்வே: 272/10 (துடுப்பாட்டம்: பிரையன் சாரி 80, கிறெய்க் ஏர்வின் 64, ஷோன் வில்லியம்ஸ் 58 ஓட்டங்கள். பந்துவீச்சு: ரங்கன ஹேரத் 5/89, டில்ருவான் பெரேரா 3/51, சுரங்க லக்மால் 2/55)
இலங்கை: 258/9 (துடுப்பாட்டம்: திமுத் கருணாரத்ன 88, குசல் பெரேரா 62, அசேல குணரத்ன 39 ஓட்டங்கள். பந்துவீச்சு: கிறேம் கிறீமர் 4/91, கார்ள் மும்பா 3/67)
சிம்பாப்வே: 233/10 (துடுப்பாட்டம்: கிறெய்ன் ஏர்வின் 72, ஷோன் வில்லியம்ஸ் 45 ஓட்டங்கள். பந்துவீச்சு: ரங்கன ஹேரத் 8/63.)
4 minute ago
28 minute ago
31 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
28 minute ago
31 minute ago
1 hours ago