2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

ஹபீஸ் இனி பந்து வீசலாம்

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 01 , மு.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் அணியின் சகலதுறை வீரர் மொஹமட் ஹபீஸின் பந்துவீச்சுப் பாணி, விதிகளுக்கு உட்பட்ட விதத்தில் அமைந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், சர்வதேசப் போட்டிகளில் பந்துவீசுவதற்கு, அவருக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுழற்பந்து வீச்சாளரான ஹபீஸ், கடந்த 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல், 12 மாதங்களுக்கு பந்து வீச தடைவிதிக்கப்பட்டிருந்தார். காலியியில் இடம்பெற்ற இலங்கையணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில், ஹபீஸின் பந்துவீச்சுப்பாணி தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டமையைத் தொடர்ந்தே, பந்துவீச தடைவிதிக்கப்பட்டிருந்தது. குறித்த போட்டியில் ஹபீஸின் பந்துவீச்சுப்பாணி குறித்து முறைப்பாடு செய்யப்பட்டமை 24 மாதங்களில் இரண்டாவது தடவையாகும்.

இந்நிலையிலேயே, பிறிஸ்பேர்ணிலுள்ள தேசிய கிரிக்கெட் நிலையத்தில் இவ்வாண்டு நவம்பர் 17ஆம் திகதி ஹபீஸ் சோதனைக்குள்ளாகியிருந்தார். இந்நிலையிலேயே, உட்திரும்பும் அனைத்து பந்துகளுக்கான ஹபீஸின் பந்துவீச்சுப்பாணி அனுமதிக்கப்பட்ட அளவிலேயே இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்தே சர்வதேசப் போட்டிகளில் பந்துவீச ஹபீஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .