2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

ஹமில்டனுக்கு 50ஆவது வெற்றி

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 24 , பி.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க கிரான்ட் பிறிக்ஸில் இலகுவாக வெற்றி பெற்ற, மெர்சிடிஸ் அணியின் பிரித்தானிய ஓட்டுநரான லூயிஸ் ஹமில்டன், சம்பியன்ஷிப் புள்ளிகளில், தனக்கும் சக மெர்சிடிஸ் அணியின் ஜேர்மனிய ஓட்டுநரான நிக்கோ றொஸ்பேர்க்குக்குமிடையிலான புள்ளிகள் வித்தியாசத்தைக் குறைத்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் இடம்பெற்ற ஜேர்மன் கிரான்ட் பிறிக்ஸுக்கு பின்னரான முதலாவது வெற்றியைப் பெற்ற ஹமில்டன், றொஸ்பேர்க்கினை விட தற்போது 26 புள்ளிகள் பின்தங்கியுள்ளார். மீதமுள்ள மூன்று பந்தயங்களில், அதிகபட்சமாக, 75 புள்ளிகளையே பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பந்தயத்தின் ஆரம்பத்தில், தனது இரண்டாவது நிலையை, ரெட் புல் அணியின் அவுஸ்திரேலிய ஓட்டுநரான டேனியல் றிச்சியார்டோவிடம் பறிகொடுத்த றொஸ்பேர்க், இறுதியில் இரண்டாமிடத்தைப் பிடித்தார். மூன்றாமிடத்தினை றிச்சியார்டோ பெற்றார்.

இப்பந்தயத்தில் வென்றதன், தனது வாழ்நாளில், 50ஆவது வெற்றியை ஹமில்டன் பெற்றுள்ளார். ஜேர்மனியின் மைக்கல் சூமாக்கர், பிரான்ஸின் அலைன் ப்றொஸ்ட் ஆகியோர் மட்டுமே, போர்மியுலா வண் வரலாற்றில், ஹமில்டனை விட அதிக வெற்றிகளைப் பெற்றுள்ளனர். சூமாக்கர் 91 வெற்றிகளையும் அலைன் ப்றொஸ்ட் 51 வெற்றிகளையும் பெற்றுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .