2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

முகம்மத் பின் றசீத் அல் மக்தூம் கிராமம் திறப்பு; 45 வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 15 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி, ஜிப்ரான்)


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பாலமுனை கிராமத்தில் வெள்ளஅனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வறுமையான குடும்பங்களுக்கென ஐக்கிய அரபு இராஜியத்தின் மனிதாபிமான அபிவிருத்தி நிறுவனத்தின் நிதியுதவியுதவியுடன் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தினால் நிர்மாணிக்கப்பட்ட முகம்மத் பின் றசீத் அல் மக்தூம் எனும் பெயரிலான கிராமம் இன்று காலை திறந்து வைக்கப்பட்டு இக்கிராமத்தில் நிர்மானிக்கப்பட்ட 45 வீடுகளும் பயணாளிகளிடம் இன்று கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில், சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ஐக்கிய அரபு இராஜியத்தின் மனிதாபிமான அபிவிருத்தி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் முகம்மட் அகமட் அல் ஹமாதி, ஐக்கிய அரபு ராஜியத்தின் தார் அல் பர் நிறுவனத்தின் செயலாளர் முகம்மத் சுஹைல் அல் முஹாரி, அதன் உறுப்பினர் தரீக் அகமத் அல் அலி, இலங்கையிலுள்ள ஐக்கிய அரபு ராஜியத்தின் தூதரக மூன்றாவது செயலாளர் தரீக் அகமத் அல் அலி, மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிபலி பாறூக் உட்டப ஐக்கிய அரபு ராஜியத்தின் தூதரக அதிகாரிகள் மற்றம் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களி;ன சம்மேளன பிரதி நிதிகள் முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்டனர்.

35 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 45 வீடுகளும் இந்த வைபவத்தின் போது பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .